Wednesday, May 16, 2007

கேட்டதில் பிடித்தது

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அனைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அனைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அனைத்தாய்
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தால்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

ஹைக்கூ கவிதைகள்

எதை கேட்டாலும் வெட்கத்தயே பதிலாக தருகிறாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்.
- தபூசங்கர்

செய்திகளை தமிழிலில் அனுப்பவும்!

செய்திகளை தமிழிலில் அனுப்ப, கீழே உள்ள முகவரியை அனுகவும்

http://quillpad.com/tamil/